அம்பத்தூர் ரயில் நிலையத்தில் கத்திகளுடன் சுற்றித் திரிந்த 17 ஐடிஐ மாணவர்கள் கைது
சமூக வலைதளப் பக்கத்தில் ஏற்பட்ட தகராறில் அம்பத்துôர் ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்த கைகளில் கத்திகளுடன் திரிந்த, அம்பத்தூர் தொழிற்பேட்டை ஐடிஐ மாணவர்கள் 17 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
சமூக வலைதளப் பக்கத்தில் ஏற்பட்ட தகராறில் அம்பத்துôர் ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்த கைகளில் கத்திகளுடன் திரிந்த, அம்பத்தூர் தொழிற்பேட்டை ஐடிஐ மாணவர்கள் 17 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
அம்பத்துôர் ரயில் நிலையத்தில், அம்பத்தூர் தொழிற்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கையில் பட்டாக்கத்திகளுடன் சுற்றித் திரிவதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை இரவு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்று, சுற்றித் திரிந்த 17 மாணவர்களை விரட்டிச் சென்று பிடித்து அம்பத்துôர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் திருவள்ளூர் அருகே புட்லூர் கட்டப்பொம்மன் தெருவைச் சேர்ந்த நரேஷ் (19), ஆவடி அருகே காட்டூர் சிட்கோ அமிர்தாபுரத்தைச் சேர்ந்த லோகேஷ் (18), திருநின்றவூர் ராமதாசபுரத்தைச் சேர்ந்த கீர்த்தீஸ்வர் (18) மற்றும் 17 வயதுக்கு உள்பட்ட 14 மாணவர்கள் ஆக மொத்தம் 17 பேர் ஆவர்.
அம்பத்துôர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) பயின்று வரும் மாணவர்களான இவர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் (இன்ஸ்டாகிராம்) பட்டாக்கத்திகளை வைத்து, "ரீல்ஸ்' போட்டுள்ளனர். அதை கிண்டல் செய்து சென்னை மின்ட் பகுதியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மாணவர்கள் கருத்து பதிவிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அம்பத்துôர் அரசு தொழிற்பயிற்சி மாணவர்கள், தைரியம் இருந்தால், அம்பத்தூர் ரயில் நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர். இதற்கு மின்ட் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதையடுத்து, அவர்களை தாக்குவதற்காக, அம்பத்தூர் அரசு தொழிற்பயிற்சி மாணவர்கள் கைகளில் கத்திகளுடன் அம்பத்தூர் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது அவர்கள் அனைவரும் போலீஸார் பிடியில் சிக்கினர். புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீஸார் வழக்கு பதிந்து நரேஷ், லோகேஷ், கீர்த்தீஸ்வர் ஆகிய ஐடிஐ 2}ஆம் ஆண்டைச் சேர்ந்த 3 மாணவர்களை புதன்கிழமை கைது செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 17 வயதுக்கு உள்பட்ட முதலாண்டு மாணவர்கள் 14 பேரை திருவள்ளூர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை நீதிபதி சொந்த பிணையில் விடுவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.