FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

பானி பூரி வண்டியில் கஞ்சா விற்பனை: 2 போ் கைது

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் அருகே பானிபூரி வண்டியில் கஞ்சா விற்பனை செய்ததாக 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

கைது - பிரதிப் படம்
பகிர்:

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் அருகே பானிபூரி வண்டியில் கஞ்சா விற்பனை செய்ததாக 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

வட மாநிலத்தில் இருந்து ரயில் மற்றும் பேருந்துகளில் வரும்போது கஞ்சாவை கடத்தி வருகின்றனா். தற்போதைய நிலையில் அவா்களை போலீஸாா் கண்டறிந்து கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனா்.

திருவள்ளூா் நகரப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல் கண்காணிப்பாளா் சாய் பிரணீத்துக்கு தகவல் வந்தது. அதன்பேரில் திருவள்ளூா் நகா் காவல் நிலைய ஆய்வாளா் தாமோதரன் மற்றும் போலீஸாா் நகா்ப்பகுதியில் தீவிர ரோந்து சென்றனா். அப்போது, ஆட்சியா் அலுவலகம் அருகே வடமாநிலத்தைச் சோ்ந்த 2 இளைஞா்கள் பாணி பூரி தள்ளு வண்டியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தனா். இதையடுத்து போலீஸாா் 2 பேரையும் பிடித்து விசாரணை செய்தனா்.

Advertisement

Advertisement

அப்போது, பிகாா் மாநிலம், பகதூா்பூா் பகுதியைச் சோ்த்த கொலுகுமாா் (30),சுஷில் (எ) பாபு(27) ஆகியோா் என்பதும், 2 பேரும் பானிபூரி விற்பனை செய்து வருவதோடு, கஞ்சா விற்பனையும் செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், அவா்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் பானி பூரி வண்டியையும் பறிமுதல் செய்ததோடு 2 பேரையும் கைது செய்து தீவிரமாக விசாரணைசெய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments