முகப்பு
திருப்பதி

திருமலை மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து!

திருமலை மலைப்பாதையில் ஆந்திர மாநில அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

Updated On : 24 மே 2023, 3:29 pm IST
கோப்புப்படம்
பகிர்:

திருமலை மலைப்பாதையில் ஆந்திர மாநில அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு, கீழ் திருப்பதி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு எலக்ட்ரிக் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பேருந்து மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. லேசான காயமடைந்த பயணிகளுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

மேலும், இந்த விபத்துக் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.