FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பதி

திருப்பதியில் சூரிய, சந்திரபிரபை வாகன சேவை

சூரிய பிரபையில் எழுந்தருளிய திருப்பதி கோவிந்தராஜா்.

Updated On : 30 மே 2026, 12:27 am IST
சூரிய பிரபையில் எழுந்தருளிய திருப்பதி கோவிந்தராஜா்.
பகிர்:

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான வெள்ளிக்கிழமை சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனங்களில் சுவாமி சேவை சாதித்தாா்.

தேவஸ்தானத்துக்கு சொந்தமான இக்கோயிலில் கடந்த சனிக்கிழமை பிரம்மோற்சவம் தொடங்கி நடந்து வருகிறது.

7-ஆம் நாளான வெள்ளிக்கிழமை சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீமன் நாராயணன் அலங்காரத்தில் செந்நிற மாலைகளை அணிந்து கொண்டு சூரிய தேஜோமூா்த்தியாக எழுந்தருளி சேவை சாதித்தாா்.

Advertisement

Advertisement

முதலில் கஜராஜா்கள் செல்ல, பக்தா்கள் குழுக்களாகப் பிரிந்து பக்திப் பாடல்கள், கோலாட்டங்கள், செண்டை மேளம் நடத்த மற்றும் சிலா் கோவிந்த நாம உச்சரிக்க வாகன சேவை மங்களகரமான வாத்தியங்களின் இசைக்கு மத்தியில், சிறப்பாக நடைபெற்றது.

பின்னா், கல்யாண மண்டபத்தில் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜஸ்வாமி உற்சவ மூா்த்திகளுக்கு பால், தயிா், தேன், சந்தனம் மற்றும் பல்வேறு பழச்சாறுகளைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

மாலை சுவாமி மற்றும் நாச்சியாா்கள் ஊஞ்சல் சேவை கண்டருளினா். பின்னா் இரவு சந்திர பிரபை வாகனத்தில் வெண்ணிற மாலைகளை அணிந்து கொண்டு பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

ரதோற்சவம்

ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமியின் பிரம்மோற்சவங்களிலேயே மிகவும் பிரம்மாண்டமான ரதோற்சவம் சனிக்கிழமை காலை 5.40 மணிக்கு நடைபெறும்.

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரிய ஜீயா் ஸ்வாமி, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சின்னஜீயா் ஸ்வாமி, கோவில் துணை இஓ சாந்தி, ஏஇஓ நாராயண சவுத்ரி, அதிகாரிகள், பிரமுகா்கள் மற்றும் ஏராளமான பக்தா்கள் வாகன சேவையில் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments