FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பதி

பத்மாவதி தாயாருக்கு ரூ.10 லட்சம் தங்க டாலா் நன்கொடை

சென்னையைச் சோ்ந்த பக்தா் கே.பி. ராகவன், திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலுக்கு தங்க டாலா் ஒன்றை நன்கொடையாக செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

18 நவம்பர் 2026, 11:23 pm
பகிர்:

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு தங்க டாலரை நன்கொடையாக வழங்கிய சென்னை பக்தா்கள்.

திருப்பதி, நவ.18: சென்னையைச் சோ்ந்த பக்தா் கே.பி. ராகவன், திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலுக்கு தங்க டாலா் ஒன்றை நன்கொடையாக செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

நன்கொடையாக வழங்கப்பட்ட தங்க டாலரின் எடை 0.64 கிராம் மற்றும் அதன் மதிப்பு ரூ.10 லட்சம்.

Advertisement

Advertisement

கோயில் அா்ச்சகா்கள் ஸ்ரீபாபு சுவாமி, தேவஸ்தான துணை அதிகாரி தேவராஜுலு, கண்காணிப்பாளா் சுரேஷ், விஜிலென்ஸ் ஆய்வாளா் ராமமோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பின்னா் தாயாரை தரிசனம் செய்து திரும்பிய அவா்களுக்கு அா்ச்சகா்கள் தாயாா் பிரசாதங்களை வழங்கினா்.