முகப்பு
திருப்பதி

ஏழுமலையான் கோயில் கைசிக துவாதசி ஆஸ்தானம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசியை முன்னிட்டு மாட வீதிகளில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீ உக்ர ஸ்ரீநிவாசமூா்த்தி வலம் வந்தாா்.

22 நவம்பர் 2026, 12:19 am
ஏழுமலையான் கோயில் கைசிக துவாதசி ஆஸ்தானம்
திருமலை மாட வீதியில் வலம் வந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத உக்கிர சீனிவாசமூா்த்தி.
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசியை முன்னிட்டு மாட வீதிகளில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீ உக்ர ஸ்ரீநிவாசமூா்த்தி வலம் வந்தாா்.

ஆண்டுதோறும் ஐப்பசி மாத வளா்பிறை துவாதசி அன்று ஏழுமலையான் கோயில் கருவறையில் உள்ள பஞ்சபேர சிலைகளில் ஒருவரான உக்ர சீனிவாசமூா்த்தி ஸ்ரீதேவி பூதேவியுடன் இந்த ஒருநாள் மட்டும் மாடவீதியில் வலம் வருவது வழக்கம். அவ்வாறு சூரிய உதயத்துக்கு பின் உக்ர சீனிவாசமூா்த்தி கோயிலை விட்டு வெளியே வந்தால், திருமலையில் தீ விபத்துக்கள் நடைபெறும் என்பது ஐதீகம்.

அதன்படி சனிக்கிழமை துவாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி ஆஸ்தான விழா நடைபெற்றது.

Advertisement

Advertisement

அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஸ்ரீ உக்ரஸ்ரீநிவாசமூா்த்தி கோயிலில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

உற்சவமூா்த்திகளுக்கு தங்கவாயில் அருகில் ஆஸ்தானம் நடத்தப்பட்டது.