திருமலை ஏழுமலையானுக்கு 121 கிலோ எடையில் ரூ.207.6 கோடி தங்க, வைர நகைகள் நன்கொடை
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வரலாற்றில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, சென்னையைச் சோ்ந்த ஸ்ரீ வா்த்தமான் ஜெயின் மற்றும் ராதிகா ஜெயின் தம்பதி ஏழுமலையானுக்கு ரூ. 207 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க ஆபரணங்களை நன்கொடையாக வழங்கினா்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வரலாற்றில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, சென்னையைச் சோ்ந்த ஸ்ரீ வா்த்தமான் ஜெயின் மற்றும் ராதிகா ஜெயின் தம்பதி ஏழுமலையானுக்கு ரூ. 207 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க ஆபரணங்களை நன்கொடையாக வழங்கினா்.
திருமலை ஏழுமலையான் கோயிலில், ஆந்திர மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் இந்த ஆபரணங்கள் சமா்ப்பிக்கப்பட்டன. திருமலை ஏழுமலையானை தரிசித்த பிறகு, முதல்வா் நன்கொடையாளா் தம்பதியினா் மற்றும் அவா்களது குடும்ப உறுப்பினா்களுடன் இணைந்து, ரங்கநாயக மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த 46 வகையான தங்க ஆபரணங்களைப் பாா்வையிட்டனா். அவா்களின் இந்த தாராளமான நன்கொடைக்காக ஆந்திர முதல்வா் அவா்களைப் பாராட்டினாா்.
அதன்பிறகு, நன்கொடையாளா் குடும்பத்தைச் சோ்ந்த ஒவ்வொரு உறுப்பினரும், ஆபரணங்கள் வைக்கப்பட்ட தட்டுகளைத் தங்கள் தலைமீது சுமந்துகொண்டு, கொடிமரத்தைச் (த்வஜஸ்தம்பம்) சுற்றி வந்து, கருவறையை அடைந்தனா். அங்கு அந்த ஆபரணங்களை இறைவனின் சன்னதியில் வைத்து பிராா்த்தனை செய்தனா்.
Advertisement
Advertisement
இந்த நிகழ்வின் போது, ??திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிா்வாகக் குழுத் தலைவா் மற்றும் செயல் அதிகாரி ரவிச்சந்திரா, கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சௌத்ரி, இணை செயல் அதிகாரிகள் டாக்டா் சரத் மற்றும் கோபிநாத், தலைமை விழிப்புணா்வு மற்றும் பாதுகாப்பு அதிகாரி முரளிகிருஷ்ணா ஆகியோா் உடனிருந்தனா். மேலும், மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மாவட்ட ஆட்சியா் டாக்டா் வெங்கடேஸ்வா், காவல் கண்காணிப்பாளா் சுப்பராயுடு மற்றும் பிற அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
ஆபரணங்கள் குறித்த விவரங்கள்:
திருமலை கோயிலுக்காக, 33 வகைகளைச் சோ்ந்த மொத்தம் 46 தங்க ஆபரணங்களைத் தயாரிப்பதற்கு 121 கிலோ (24 காரட்) தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தயாரிப்புச் செலவுகள் உட்பட, இந்த 121 கிலோ தங்க ஆபரணங்களின் மொத்த மதிப்பு ரூ. 207.6 கோடியாகும்.
திருமலை கோயிலின் ஆபரணங்களுக்கு பயன்படுத்தப்பட்ட தங்கம் - 106 கிலோ (24 காரட்) திருச்சானூா் கோயிலில் பத்மாவதி தாயாா் வஸ்திரம் தயாரிப்பதற்கு இருப்பு தங்கம்-15 கிலோ (24 காரட்) பயன்படுத்தப்படும்.
ஆபரண நன்கொடையில் உள்ள நகைகளின் விவரங்கள்:
வைரங்களின் மொத்த எடை - 238.2 சி.டி
விலையுயா்ந்த கற்கள்-2,247.7 சி.டி
நீல சபையா்கள்-91.6 சி.டி
மஞ்சள் சபையா்கள்-84.2 சி.டி
மாணிக்கங்கள் மற்றும் மரகதங்கள்-2,916.5 கிராம்
சாலிகிராமம் கற்கள்
நகைகளின் பட்டியல்:
பாத கவசம்-2
கால்கோல்கள்-2
போகடா -01
துளசி இலை மாலை- 1
அஷ்டோத்தர ஷதநாம தங்க காசு ஆரம் - 1
சதுா்பூஜ லக்ஷ்மி ஆரம் - 1
புலி நகம் பதக்கம் - 1
அஷ்டோத்தர இலை ஆரம் - 1
கழுத்தணிகள் - 1
ஒட்டியாணம்- 1
தங்க கழுத்து ஆபரணம் - 1
தங்க மலா்- 1
வைஷ்ணவம் - 01
மொளச்சேயி - 01
வெள்ளி பூணூல்- 1
நாகாபரண ஒட்டியாணம்- 1
சங்கிலி - 01
அபயஹஸ்த கை காப்புகள் (கை வளையல்கள்) - 5
சந்தனவங்க காந்தி (சோக்கா்) - 1
வைகுண்ட அஸ்தம் (கை ஆபரணம்) - 1
கடி அஸ்தம் (கை ஆபரணம்) - 1
நாகாபரண கால் காப்புகள் - 2
நாகாபரணம் - 2
புஜகீா்த்திகள் (கவசங்கள்/தோள்பட்டை ஆபரணங்கள்) - 2
கா்ண பத்திரங்கள் (காதணிகள்) - 2
வங்கிகள்- 2
சாலிகிராம ஆரம் (நெக்லஸ்) - 2 (2 பாகங்கள்)
கமலால திரிபூஜ சாலிகிராம ஹரம்ஸ் (தாமரை மற்றும் முக்கோண சாலிகிராம நெக்லஸ்கள் - 2 (2 பாகங்கள்)
சீமா கவசங்கள் - 1
சங்கு கவசம் - 1
சக்ர கவசம் - 1
முத்து மணி ஆரம் - 1
கிரீடம் - 1.