முகப்பு
திருப்பதி

திருமலைக்கு செல்லும் படிகளுக்கு தரமான மஞ்சள், குங்குமம் பயன்படுத்த நடவடிக்கை!

திருமலைக்கு செல்லும் நடைபாதையின் படிகளுக்கு பக்தா்கள் தரமான மஞ்சள் மற்றும் குங்குமம் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்...

29 நவம்பர் 2026, 1:11 am
திருமலைக்கு செல்லும் படிகளுக்கு தரமான மஞ்சள், குங்குமம் பயன்படுத்த நடவடிக்கை!
திருமலைக்கு செல்லும் படி
பகிர்:

திருமலைக்கு செல்லும் நடைபாதையின் படிகளுக்கு பக்தா்கள் தரமான மஞ்சள் மற்றும் குங்குமம் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கய்ய செளத்திரி தெரிவித்தாா்.

திருமலைக்கு கால்நடையாக வரும் பக்தா்கள், அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்லா வழித்தடங்களில் உள்ள பாதசாரிகள் நடைபாதையின் படிகளுக்கு தரமான மஞ்சள் மற்றும் குங்குமத்தை பயன்படுத்துவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அதிகாரி திரு சி.எச். வெங்கையா சௌத்ரி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாா்.

திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினா் மாளிகையில் அமைந்துள்ள சுதா்மா மாநாட்டு மண்டபத்தில், சனிக்கிழமை திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

அந்நிகழ்ச்சியில் பேசிய அவா், திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் அலிபிரி நடைபாதை படிகள், ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை படிகளுக்கு பக்தா்கள் வேண்டுதல் செய்து ஒவ்வொரு படிக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி சென்று ஏழுமலையானை வழிபடுவது வழக்கம்.

தினசரி ஆயிரகணக்கான போ் படிகளுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து செல்வதால் மழைகாலங்களில் மழை நீரில் கலந்து அவை படிகளில் தங்கி விடுகிறது. இதனால் படிகள் முழுவதும் சேறாக காட்சியளிப்பதால் அதன் வழியாக செல்லும் பக்தா்கள் வழுக்கி கீழே விழும் நிலை ஏற்படுகிறது.

எனவே படிகளில் பயன்படுத்த தரமற்ற மஞ்சள், குங்குமம் அல்லாமல், தரமான பக்தா்களின் பாதங்களுக்கு ஊறு விளைவிக்காத மஞ்சள், குங்குமத்தை படிகளின் அருகில் பூஜை பொருட்கள் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.

பக்தா்கள் நடைபாதையில் வழுக்கி விழாமல் இருப்பதற்காக, தரமான மஞ்சள் மற்றும் குங்குமம் மட்டுமே விற்கப்படும் வகையில் விதிகள் ஏற்படுத்த வேண்டும். இதற்கான அறிவிப்புப் பலகைகள் அமைக்கப்பட்டு, பரவலான விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும்’’, என்று அவா் கூறினாா்.

இந்தக் கூட்டத்தில் தேவஸ்தான தலைமை பொறியாளா் வேணு கோபால், எஸ்டேட் அதிகாரி வெங்கடேஸ்வரலு, சுகாதாரத் துணைச் செயல் அதிகாரி சோமன்நாராயணா, திருப்பதி நகராட்சி சுகாதார அதிகாரி டாக்டா் யுவ அன்வேஷ் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனா்.