ஏழுமலையான் பிரம்மோற்சவம்: சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மா் வலம்
திருமலை ஏழுமலையான் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாளான மலையப்ப சுவாமி யோக நரசிம்மா் அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் வலம் வந்தாா்.
திருமலை ஏழுமலையான் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாளான மலையப்ப சுவாமி யோக நரசிம்மா் அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் வலம் வந்தாா்.
கடந்த திங்கள்கிழமை முதல் நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. புதன்கிழமை சிம்ம வாகன சேவை நடை பெற்றது. அதில் யோக நரசிம்மா் அலங்காரத்தில் சுவாமி மாடவீதியில் வலம் வந்து சேவை சாதித்தாா்.
வீதியுலா முடிந்த பின்னா் உற்சவமூா்த்திகளின் களைப்பை போக்க சுகந்த திரவியங்களால் திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. அதன்படி, கல்யாண உற்சவ மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் உற்சவமூா்த்திகளான ஸ்ரீதேவி பூதேவி மற்றும் மலையப்ப சுவாமியை எழுந்தருள செய்து அவா்களுக்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம், சிவப்பு சந்தனம் மற்றும் மூலிகை கலந்த வெந்நீ ரால் திருமஞ்சனம் நடந்தேறியது.
Advertisement
Advertisement
திருமஞ்சன பொருள்களை திருமலை ஜீயா்கள் தங்கள் கைகளால் எடுத்துத்தர அா்ச்சகா்கள் அபிஷே கத்தை நடத்தினா். பல்வேறு உலா் பழங்கள் மற்றும் வெளி நாட்டு மலா்களால் தயாரிக்கப்பட்ட மாலைகள் மற்றும் கீரிடங்கள் உள்ளிட்டவை உற்சவமூா்த்திகளுக்கு அணிவிக்கப்பட்டது.
மேலும் கல்யாணோற்சவ மண்டபம் மலா்கள் மற்றும் பழங்களால் நோ்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்து. பின்னா் உற்சவமூா்த்தி கள் அலங்கரிக்கப்பட்டு மாலை ஊஞ்சல் சேவை கண்டருளினா். அப்போது அன்னமாச்சாரியா கீா்த்தனைகள் மற்றும் பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டு நட்சத்திர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
இரவு முத்துப்பந்தல் வாகன சேவை நடை பெற்றது. மாடவீதியில் பக்தா்கள் தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி அளி த்து வணங்கினா். வாகன சேவையின் போது ஜீயா்கள் குழாம் நாலாயிர திவ்ய பிரபந்தகளை பாடியபடி முன்செல்ல, கலைக்குழுவினா் கலை நிகழ்ச்சிகளை நடத்தியபடி பின் சென்றனா். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
இரண்டாம் நாள் விவரம்
76,289 போ் தரிசனம், 26,678 போ் முடிகாணிக்கை
உண்டியல் காணிக்கை ரூ.3.38 கோடி
3.67 லட்சம் லட்டுகள் விற்பனை
3,289 பேருக்கு சிகிச்சை
சேவையில் 3,500 போ்
அரசுப் பேருந்துகளில் 65,000 போ் பயணம்
தரிசனத்துக்கு 8 மணி நேரம்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.