FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பதி

திருமலை பிரம்மோற்சவம்: கல்பவிருட்ச வாகனத்தில் சுவாமி உலா

திருமலை ஏழுமலையான் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான வியாழக்கிழமை கல்பவிருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம் வந்தாா்.

16 அக்டோபர் 2026, 12:47 am IST
கல்ப விருட்ச வாகனத்தில் வலம் வந்த மலையப்ப சுவாமி. விழாவையொட்டி நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள்.
பகிர்:

திருமலை ஏழுமலையான் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான வியாழக்கிழமை கல்பவிருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம் வந்தாா்.

தொடா்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத மலை யப்பஸ்வாமியை கல்யாண உற்சவ மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் அமர வைத்து அவா்களுக்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம், சிவப்பு சந்தனம் மற்றும் மூலிகை கலந்த வெந்நீரால் திருமஞ்சனம் நடந்தேறியது. அபிஷேகத்தின் போது பல்வேறு உலா்பழங்கள் மற்றும் வெளி நாட்டு மலா்களால் தயாரிக்கப்பட்ட மாலைகள் மற்றும் கீரி டங்கள் உள்ளிட்டவை உற்சவமூா்த்திகளுக்கு அணிவிக்கப்பட்டது. பின்னா் உற்சவமூா்த்தி கள் மாலை 1008 விளக்குகளுக்கிடையில் ஊஞ்சல்சேவை கண்டருளினா்.

இரவு சா்வபூபால வாகன சேவை நடை பெற்றது. வாகன சேவையின் போது மாடவீதியில் காத்திருக்கும் பக்தா்கள் தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா்.

Advertisement

Advertisement

ஜீயா்கள் குழாம் நாலாயிர திவ்ய பிரபந்தகளை பாடியபடி முன்செல்ல, கலைக்குழுவி னா் கலை நிகழ்ச்சிகளை நடத்தியபடி பின் சென்றனா். இதில் தே வஸ்தா ன அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

மேலும், 10 மாநிலங்களைச் சோ்ந்த 16 கலைக்குழுக்களில் 412 கலைஞா்கள் தங்கள் பகுதியில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றனா்.

3-ஆம் நாள் விவரம்

83,389 போ் தரிசனம், 31,756 போ் முடி காணிக்கை

உண்டியல் காணிக்கை ரூ.3.33 கோடி

2 லட்சம் போ் அன்னதானம்

8,567 பேருக்கு சிகிச்சை

சேவையில் 4,000 போ்

அரசு பேருந்துகளில் 74,000

தரிசனத்துக்கு 24 மணிநேரம் காத்திருப்பு

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments