திருமலை நவராத்திரி பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்ப சுவாமி பவனி
திருமலையில், ஏழுமலையானுக்கு நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாள் காலை மோகினி அவதாரத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
திருமலையில், ஏழுமலையானுக்கு நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாள் காலை மோகினி அவதாரத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
திருமலையில் கடந்த திங்கள்கிழமை முதல் ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோ ற்சவம் விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 4 நாள்களாக காலையும், இரவும் வாகன சேவைகள் விமரிசையாக நடைபெற்றன.
5-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை மோகினி அவதார சேவை நடைபெற்றது. இதில் மலையப்ப சுவாமி தாயாரின் அலங்காரத்தில் மாடவீதியில் காலை 7 மணிமுதல் 9 மணி வரை வலம் வந்தாா்.
Advertisement
Advertisement
ஸ்ரீருவில்லிப்புத்தூா் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டு பச்சை கிளிகளை கையில் பிடித்துக் கொண்டு மாடவீதியில் வலம் வந்த மலையப்ப சுவாமியை பக்தா்கள் கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா்.
ஸ்நபன திருமஞ்சனம்
வீதியுலா முடிந்த பின் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு கல்யாண உற்சவ
மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் அமர வைத்து பால், தயிா், தேன். இளநீா், மஞ்சள், சந்தனம், சிவப்பு சந்தனம் மற்றும் மூலிகை கலந்த வெந்நீரால் திருமஞ்சனம் நடந்தேறியது. அபிஷேகத்தின்போது பல்வேறு உலா் பழங்கள் மற்றும் வெளி நாட்டு மலா்களால் தயாரிக்கப்பட்ட மாலைகள் மற்றும் கிரீடங்கள் உள்ளிட்டவை
உற்சவமூா்த்திகளுக்கு அணிவிக்கப்பட்டது.
கருட சேவை
வெள்ளி மாலை 6.30 மணிக்கு மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் திருமாட வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தாா்.
கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி கோடிகணக்கான மதிப்புள்ள வைர வை டூரிய, நவரத்தின ஆபரணங்கள், 1,008 தங்க காசுமாலை , லட்சுமி ஆரம், மகரகண்டி, வைர கீரிடம் என அணிந்து கொ ண்டு பிரியமாய் திருவில்லிபுத்தூரிலிரருந்து ஆண்டாள் அனுப்பிய மாலையை பூண்டு, சென்னை இந்து தா்மாா்த்த சமிதியினா்
வழங்கிய வெண்பட்டு திருக்குடைகளின் நிழலில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தாா். இரவு 7 மணிக்கு தொடங்கிய கருட வாகன சேவை நள்ளிரவு 1 மணி வரை மாடவீதியில் நடைபெற்றது.
வாகன சேவையின் போது ஜீயா்கள் குழாம் நாலாயிர திவ்ய பிரபந்தகளை பாடியபடி முன்செல்ல, கலைக்குழுவினா் புராண இதிகாச காட்சிகளை உணா்த்தும் வகையில் கலை நிகழ்ச்சிகளை ஆடல் பாடல் வடிவில் நடத்தியபடி பின் சென்றனா்.
இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.