குறைதீர் கூட்டங்கள் ரத்து
சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து குறைதீர் கூட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து குறைதீர் கூட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2016-க்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. எனவே, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டங்கள் மார்ச் 7-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல, மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டங்கள், விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள், ஓய்வூதியர் குறைதீர் கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான குறைதீர் கூட்டங்களும் அடுத்த அறிவிப்பு வரும் வரையில் ரத்து செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
குறைதீர் கூட்டங்கள் மீண்டும் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.