FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிளஸ் 2 தேர்வு: 24,259 மாணவர்கள் எழுதினர்

திருவண்ணாமலை மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை (மார்ச் 3) தொடங்கிய பிளஸ் 2 தேர்வை 24,259 பேர் எழுதினர்.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை (மார்ச் 3) தொடங்கிய பிளஸ் 2 தேர்வை 24,259 பேர் எழுதினர்.

தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் தொடங்கியது. திருவண்ணாமலை வருவாய் மாவட்டத்தில் இந்தத் தேர்வை 81 மையங்களில் 24,259 மாணவர்கள் எழுதினர்.

திருவண்ணாமலை கல்வி மாவட்டம்: திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 135 அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 7,692 மாணவர்கள், 7,984 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 676 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இவர்களுக்காக 52 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

Advertisement

Advertisement

செய்யாறு கல்வி மாவட்டம்:செய்யாறு கல்வி மாவட்டத்தில் 73 அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 3,821 மாணவர்கள், 4,762 மாணவிகள் என மொத்தம் 8 ஆயிரத்து 583 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இவர்களுக்காக 29 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆக மொத்தம் திருவண்ணாமலை, செய்யாறு கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய வருவாய் மாவட்டத்தில் 208 பள்ளிகளைச் சேர்ந்த 11 ஆயிரத்து 513 மாணவர்கள், 12 ஆயிரத்து 746 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 259 மாணவ - மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர்.

புதிய தேர்வு மையங்கள்: மாவட்டத்தில் இந்த ஆண்டு முதல் முறையாக அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, காரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி, அரட்டவாடி அரசு மேல்நிலைப் பள்ளி, மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளி, செய்யாறு விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் புதிய தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆட்சியர் ஆய்வு: தமிழ் முதல் தாள் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட சில தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மற்ற தேர்வு மையங்களில் 140 பறக்கும் படை உறுப்பினர்கள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

வரும் திங்கள்கிழமை தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடைபெறுகிறது. தமிழ் முதல் தாள் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒருவர் கூட பிடிபடவில்லை. தேர்வு நல்ல முறையில் நடைபெற்றது என்று கல்வித் துறை வட்டாரங்கள்

தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments