FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சரக்கு வாகனம் கவிழ்ந்து 13 பேர் காயம்

கீழ்பென்னாத்தூர் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 5 பெண்கள் உள்பட 13 பேர் பலத்த காயமடைந்தனர்.

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

கீழ்பென்னாத்தூர் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 5 பெண்கள் உள்பட 13 பேர் பலத்த காயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சே.பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 20 பேர் சரக்கு வாகனத்தில் (டாடா ஏசி) வியாழக்கிழமை கீழ்பென்னாத்தூரை அடுத்த கானலாபாடி கிராமத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தனர்.
துக்க நிகழ்ச்சி முடிந்து மீண்டும் சே.பேட்டைக்கு திரும்பினர். கீழ்பென்னாத்தூரை அடுத்த நாரியமங்கலம் கூட்டுச்சாலை பகுதியில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த விவசாய நிலத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த சே.பேட்டை கிராமத்தைச் சேர்ந்த இந்திரா (25), ஆனந்தன் (35), முனுசாமி (65), அஞ்சலை (35), முத்துக்கிருஷ்ணன் (62), முனியன் (60), சசி (32), ஜோதி (36), சேட்டு (70), மற்றொரு அஞ்சலை (46), ஜெயாமல்லி (70), ராஜமாணிக்கம் (52), ஓட்டுநர் ஏழுமலை (35) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இவர்களை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து 
வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments