பாஜக ஆய்வுக் கூட்டம்
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி பாஜக ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி பாஜக ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் நேரு தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் நரேந்திரன், வேலூர் கோட்டப் பொறுப்பாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
அகில இந்திய பாஜக இணை அமைப்பு பொதுச் செயலர் சந்தோஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசுகையில், வரும் மக்களவைத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் பாஜக வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் பாடுபட வேண்டும். வாக்குச்
சாவடி பொறுப்பாளர்களை நியமிக்கும் பணிகளை இப்போதே தொடங்க வேண்டும். பாஜக அரசின் சாதனைகள், வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கிராம மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்றார்.
கூட்டத்தில், கோட்ட அமைப்புச் செயலர் டி.எஸ்.குணசேகரன், மாவட்ட துணைத் தலைவர் எம்.எஸ்.சுந்தரமூர்த்தி, மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் அன்பரசன், அமைப்பாளர் ஜம்புகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.