மது போதையில் மயங்கி விழுந்த முதியவர் சாவு
வந்தவாசி அருகே மது போதையில் மயங்கி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.
வந்தவாசி அருகே மது போதையில் மயங்கி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (70). இவரது மாமியாரான வந்தவாசியை அடுத்த மங்கலம் மாமண்டூரைச் சேர்ந்த பாப்பம்மாள் (95) காலமானதை அடுத்து, துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பெருமாள் தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை மங்கலம் மாமண்டூருக்கு வந்தார்.
அங்கு அவர் மது அருந்தினாராம். பின்னர், மங்கலம் மாமண்டூர் கூட்டுச்சாலை அருகே உள்ள தனியார் பள்ளி அருகில் பெருமாள் மதுபோதையில் மயங்கிக் கிடந்தார். அப்போது, நாக்கு வறண்டு அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது.
தகவலறிந்த கீழ்க்கொடுங்காலூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்று பெருமாளின் சடலத்தை கைப்பற்றி, உடல்கூறு பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.