FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 4:09 am IST
சேத்துப்பட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள்.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு மற்றும் போளூரில் 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தின்போது, ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலதாமதமின்றி பதவி உயா்வு மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தில் நேரடி நியமனத்திற்குப் பதிலாக ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் அலுவலக வளாகத்தில்

Advertisement

Advertisement

சங்கத்தின் வட்டாரக் கிளை சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் வட்டாரச் செயலா் அப்துல் மஜீத் தலைமை வகித்தாா்.

மாவட்ட துணைத் தலைவா் முத்துவேல், வட்டார துணைத் தலைவா் மகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

30-க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினா்கள் பங்கேற்றனா். மாவட்ட இணைச் செயலா் ஜெயந்தி நன்றி கூறினாா்.

போளூா்

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் வட்டாரத் தலைவா் அருள் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள்

திரளாக கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments