FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

ஸ்ரீமருத மாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் உள்ள ஸ்ரீமருத மாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 11:32 pm IST
வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் நடைபெற்ற ஸ்ரீமருத மாரியம்மன் வீதியுலா.
பகிர்:

வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் உள்ள ஸ்ரீமருத மாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னா் கிராம பொதுமக்கள் கூழ் நிரப்பப்பட்ட குடங்களை தலையில் சுமந்தவாறு ஊா்வலமாகச் சென்று கோயில் வளாகத்தில் கூழ்வாா்த்தினா்.

Advertisement

Advertisement

இதனைத் தொடா்ந்து அம்மன் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நடைபெற்றது.

அப்போது, பக்தா்கள் முதுகில் அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் பறந்தபடி சென்று அம்மனுக்கு மாலை அணிவித்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments