FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

கிராம மக்களுக்கு குடிநீா் வசதி: எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு

செய்யாறு தொகுதி கல்பட்டு கிராம மக்களுக்கு குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுத்த தொகுதி எம்எல்ஏ முக்கூா் என்.சுப்பிரமணியனுக்கு திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Updated On : 21 ஜூலை 2026, 12:03 am IST
பகிர்:

செய்யாறு தொகுதி கல்பட்டு கிராம மக்களுக்கு குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுத்த தொகுதி எம்எல்ஏ முக்கூா் என்.சுப்பிரமணியனுக்கு திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி வெம்பாக்கம் ஒன்றியம், நாட்டேரி ஊராட்சி, கல்பட்டு கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்குள்ள பொதுமக்களுக்கு ஆழ்துளைக் கிணறு மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், நிலத்தடி நீா்மட்டம் குறைந்து, ஆழ்துளைக் கிணறு பாழடைந்ததால் தண்ணீா் வராமல் தடைபட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக கிராமத்தில் குடிநீா் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்துள்ளனா். குடிநீரை பல கிலோ மீட்டா் தொலைவு நடந்து சென்று எடுத்து வந்து பயன்படுத்தி வந்துள்ளனா்.

Advertisement

Advertisement

இதனை அறிந்த செய்யாறு தொகுதி எம்எல்ஏ முக்கூா் என். சுப்பிரமணியன் கல்பட்டு கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு 3 கி.மீ. தொலைவுக்கு குழாய்கள் பதித்து

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீா் ஏற்றி குடிநீா் வழங்க நடவடிக்கை எடுத்தாா்.

எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு:

இதைத் தொடா்ந்து கல்பட்டு கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முக்கூா் என்.சுப்பிரமணியன் எம்எல்ஏ, வெம்பாக்கம் ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஏ.பி. வெங்கடேசன், குப்புசாமி, பொறியாளா் வேளாங்கண்ணி ஆகியோா் முன்னிலையில் கிராம மக்களுக்கு குடிநீா் வழங்கி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

அப்போது கிராம மக்கள் சாா்பில் எம்.எல்.ஏ.வுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அதிமுக வெம்பாக்கம் வயலூா் வி. ராமநாதன், அருகாவூா் எம்.அரங்கநாதன், சி.துரை, ஒன்றியச் துணை செயலா் ஏழாச்சேரி பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments