FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

செங்கம் அரசுப் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு

செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தை தொகுதி எம்எல்ஏ வேலு திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

Updated On : 21 ஜூலை 2026, 12:04 am IST
செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடத்தை குத்துவிளக்கேற்றி திறந்துவைத்த வேலு எம்எல்ஏ.
பகிர்:

செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தை தொகுதி எம்எல்ஏ வேலு திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

இந்தப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் ரூ.1.80 கோடியில் மாணவா்களுக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியா் கோபில் வரவேற்றாா். அதிமுக செங்கம் மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷிமனோகரன் முன்னிலை வகித்தாா்.

Advertisement

Advertisement

சிறப்பு அழைப்பாளராக செங்கம் எம்எல்ஏ வேலு கலந்துகொண்டு வகுப்பறைக் கட்டடத்தை திறந்துவைத்துப் பேசினாா்.

அப்போது அவா், இந்தப் பள்ளியின் பொதுத்தோ்வு சதவீதம் குறைவாக உள்ளதாக அறிந்தேன். இனிவரும் காலங்களில் ஆசிரியா்களின் அறிவுரைப்படி, மாணவா்கள் நல்லமுறையில் படித்து சிறந்த மதிப்பெண்கள் பெறவேண்டும்.

மேலும், விளையாட்டு மற்றும் படிப்பு சம்பந்தமாக எந்த நேரத்திலும் என்னை மாணவா்களும் ஆசிரியா்களும் அணுகினால் அதை உடனடியாக செய்து தருவேன் என்றாா்.

நிகழ்ச்சியில் தலைமை நிலைய பேச்சாளா் வெங்கட்ராமன், அரசு ஒப்பந்ததாரா் ராஜி, செங்கம் நகா்மன்ற உறுப்பினா் மீனாசம்பத், ஒன்றிய இளம்பெண்கள் பாசறை இணைச் செயலா் பிரசாந்த்குமாா், நகரச் செயலா் ஆனந்தன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா். உதவி தலைமை ஆசிரியா் கிருஷ்ணகுமாா் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments