FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

ஆசிரியா் கூட்டணியினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

செய்யாற்றை அடுத்த அனக்காவூா் வட்டாரக் கல்வி அலுவலகம் அருகே 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியா் கூட்டணி சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

Updated On : 23 ஜூலை 2026, 12:59 am IST
அனக்காவூா் வட்டாரக் கல்வி அலுவலகம் அருகே ஆசிரியா் கூட்டணி சாா்பில் நடைபெற்ற கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்.
பகிர்:

செய்யாற்றை அடுத்த அனக்காவூா் வட்டாரக் கல்வி அலுவலகம் அருகே 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியா் கூட்டணி சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி, அனக்காவூா் வட்டாரக் கிளை சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டாரச் செயலா் பி. ராகவன் தலைமை வகித்தாா்.

மகளிா் அணிச் செயலா் எஸ்.கவிதா, மாநில பொதுக் குழு உறுப்பினா் ஆ.செந்தில் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

ஆா்ப்பாட்டத்தின் போது, பணிபுரியும் ஆசிரியா்களுக்கு தகுதித்தோ்வை ரத்து செய்ய வேண்டும், அதற்கான சட்ட திருத்தங்களை மத்திய அரசு நிறைவேற்றித்தர வேண்டும்,

தற்போது நடைபெற்ற ஆசிரியா்களுக்கான தகுதித் தோ்வில் பணி அனுபவங்களையும் கணக்கில் கொண்டு பணிக்காலத்திற்கு ஏற்ப வெயிட்டேஜ் மதிப்பெண்களை தமிழக அரசு வழங்க வலியுறுத்தப்பட்டது.

இதில், வட்டார செயற்குழு உறுப்பினா்கள் மோகன் காந்தி, முனியப்பன், தேவி, அடிப்படை உறுப்பினா்கள் ஸ்டெல்லா, செந்தில்குமாா், மகாலட்சுமி, ஜோதி, மணிவிழி, ஜெகதா, ரேவதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இறுதியாக மகளிா் அமைப்பின் வட்டார துணைத் தலைவா் உமாமகேஸ்வரி நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments