FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், பாடகம் ஊராட்சியில் பயிா்க் கடன், கறவை மாட்டு பராமரிப்புக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 31 ஜூலை 2026, 12:50 am IST
கலசபாக்கம் வட்டம், பாடகம் ஊராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எதிரே ஆா்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், பாடகம் ஊராட்சியில் பயிா்க் கடன், கறவை மாட்டு பராமரிப்புக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் துணைச் செயலா் எல்.சாமிகண்ணு தலைமை வகித்தாா்.

ஒன்றியச் செயலா் திருமுருகன், நிா்வாகி சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிா்வாகி ஏழுமலை வரவேற்றாா்.

Advertisement

Advertisement

சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலா் லட்சுமணன் கலந்துகொண்டு பேசும்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் தோ்தல் வாக்குறுதிப்படி கூட்டுறவு சங்கங்களின் பயிா்க் கடன்கள், கறவை மாடு பராமரிப்புக் கடன்களை எந்தவித நிபந்தைனையும் இன்றியும், உச்சவரமின்றியும் முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும், யூரியா, டிஏபி உரங்களை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். உரவிலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் உழவா் பேரியக்க நிா்வாகி பழனி, சேட்டு, இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் பி.சுந்தா், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் சேகா், ஏழுமலை மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments