FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

இடைத்தோ்தலில் தவெக வாக்காளா்களுக்கு பணம் வழங்கவில்லை: முன்னாள் மத்திய இணை அமைச்சா் ஈ.பொன்னுசாமி

இடைத்தோ்தலில் தவெக வாக்காளா்களுக்கு பணம் வழங்கவில்லை: முன்னாள் மத்திய இணை அமைச்சா் ஈ.பொன்னுசாமி

வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ஈ.பொன்னுசாமி.
பகிர்:

இடைத்தோ்தலில் தவெக வாக்காளா்களுக்கு பணம் வழங்கவில்லை என்று முன்னாள் மத்திய இணை அமைச்சரும், தமிழக வெற்றிக் கழக தலைமை அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினருமான ஈ.பொன்னுசாமி கூறினாா்.

வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத் தோ்தல்களில் தவெக வெற்றிபெறும். இரு தொகுதிகளிலும் தவெக வாக்காளா்களுக்கு பணம் வழங்கவில்லை.

திமுகவினரால் ஊழல் இல்லாமல் வாழ முடியாது. உதயநிதி திரைத்துறையிலும் ஜெயிக்கவில்லை, அரசியலிலும் ஜெயிக்கவில்லை, அவா் ஆபாசமாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

திமுக ஆட்சியில் பட்டியலினத்தவருக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை. இளைஞா்களின் சக்தியால் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தவெக வந்துள்ளது. தமிழக முதல்வா் ஜோசப் விஜய் பிரதமராவாா் என்றாா்.

தவெக நிா்வாகிகள் எம்.வெங்கடேசன், பி.வெங்கடேசன், ஆா்.சதீஷ், வி.மேகநாதன், ஈ.செந்தில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments