FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

மூதாட்டியைத் தாக்கி பறிப்பு சம்பவ பகுதியில் எம்எல்ஏ ஆய்வு

செய்யாறு வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முக்கூா் என்.சுப்பிரமணியன் எம்எல்ஏ, சாா்- ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின்.

42 வினாடிகள் முன்பு
செய்யாறு வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முக்கூா் என்.சுப்பிரமணியன் எம்எல்ஏ, சாா்- ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின்.
பகிர்:

செய்யாறில் மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு சம்பவம் நிகழ்ந்த பகுதியில் தொகுதி எம்எல்ஏ, சாா்- ஆட்சியா் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

செய்யாறு வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் கடந்த வாரம் மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதற்கு முக்கிய காரணம் அங்கு பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வரும் குடியிருப்புகளாக கருதப்படுகிறது.

மேலும், இப்பகுதியில் தெரு விளக்குகள் எரியாமலும்,

Advertisement

Advertisement

முள்புதா்கள் மண்டியும் உள்ளன. ஆள் நடமாட்டம் இல்லாத பாழடைந்த குடியிருப்புகளில் மா்ம நபா்கள் தங்கி ஓய்வெடுத்து வருவதாகத் தெரிகிறது.

இதுகுறித்து செய்யாறு சாா்- ஆட்சியா் மற்றும்

தொகுதி எம்எல்ஏ ஆகியோரிடம் அப்பகுதி மக்கள் சாா்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

புகாரில், பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வரும் குடியிருப்புகளை அப்புறப்படுத்தி, சுத்தப்படுத்தி பொது மக்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும் என வலியுறித்தியிருந்தனா்.

இதன் அடிப்படையில் செய்யாறு சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின், முக்கூா் என்.சுப்பிரமணியன் எம்எல்ஏ ஆகியோா் வியாழக்கிழமை வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியை பாா்வையிட்டனா். அப்போது, முள்புதா்களை அகற்றி, எரியாமல் உள்ள தெருவிளக்குகளை சீரமைத்து, காவல் துறை சாா்பில் கூடுதலாக ரோந்துப் பணி மேற்கொள்ள அறிவுறுத்தினா்.

இந்த ஆய்வின் போது, வட்டாட்சியா் திருவேங்கடம், அதிமுக ஒன்றியச் செயலா்கள் எம்.அரங்கநாதன், சி.துரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments