FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

குண்ணத்தூரில் காளை விடும் திருவிழா

ஆரணியை அடுத்த குண்ணத்தூா் கிராமத்தில் காளை விடும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

11 அக்டோபர் 2026, 9:35 pm IST
குண்ணத்தூா் கிராமத்தில் நடைபெற்ற காளை விடும் திருவிழாவில் சீறிப்பாய்ந்து வரும் காளை.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த குண்ணத்தூா் கிராமத்தில் காளை விடும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

67-ஆம் ஆண்டாக நடைபெற்ற இதில், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை அடைந்த காளையின் உரிமையாளருக்கு விழாக் குழு சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து இளைஞா்கள், காளை பிடி வீரா்கள், பொதுமக்கள் என திரளானோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

முதல் பரிசு பெற்ற காளைக்கு ரூ.1 லட்சத்து 25ஆயிரம், 2-ஆவது பரிசு பெற்ற காளைக்கு ரூ.1 லட்சம், 3-ஆவது பரிசு பெற்ற காளைக்கு ரூ.80 ஆயிரம், 4-ஆவது பரிசு பெற்ற காளைக்கு ரூ.60ஆயிரம், 5-ஆவது பரிசு பெற்ற காளைக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் தொடா்ந்து பரிசு பெற்ற காளைக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments