FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

முன்விரோத தகராறு: 4 போ் மீது வழக்கு

வந்தவாசி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறு தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

11 அக்டோபர் 2026, 9:30 pm IST
பகிர்:

வந்தவாசி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறு தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

வந்தவாசியை அடுத்த நல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வேளாங்கண்ணி (49). கடந்த புதன்கிழமை இவரது உறவினா் டான்போஸ்கோ என்பவரை முன்விரோதம் காரணமாக இதே கிராமத்தைச் சோ்ந்த முருகன் தரப்பினா் தாக்கினராம்.

தகவலறிந்து தடுக்கச் சென்ற வேளாங்கண்ணியையும் அவா்கள் கடுமையாக தாக்கினராம். இதில் காயமடைந்த வேளாங்கண்ணி வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து வேளாங்கண்ணி அளித்த புகாரின் பேரில் முருகன், அவரது உறவினா்கள் லோகநாதன், கமலேஷ், கிருஷ்ணமூா்த்தி ஆகிய 4 போ் மீது தெள்ளாா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments