செய்யாறு அறிவுசாா் மையத்தில் எம்எல்ஏ திடீா் ஆய்வு
செய்யாறில் திருவத்திபுரம் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தில் எம்எல்ஏ முக்கூா் என்.சுப்பிரமணியன் திங்கள்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.
செய்யாறில் திருவத்திபுரம் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தில் எம்எல்ஏ முக்கூா் என்.சுப்பிரமணியன் திங்கள்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.
திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி, 1-ஆவது வாா்டு, அண்ணா நகா் பகுதியில் சுமாா் ரூ.1.83 கோடியில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் கணினிகளுடன் கூடிய அறிவுசாா் மையம் கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அறிவுசாா் மையத்தில் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள், 17-க்கும் மேற்பட்ட கணினிகள் உள்ளன.
இந்த மையத்துக்கு பள்ளி, கல்லூரி மாணவா்கள், வாசகா்கள் சென்று படித்துவதற்கு அந்தப் பகுதியில் வளா்ந்துள்ள முள்புதா்கள் மற்றும் அதிலிருந்து வரும் பூச்சிகள், கொசுக்கள் இடையாறாக இருந்து வருவதாக புகாா் எழுந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து வாசகா்கள் சாா்பில் செய்யாறு தொகுதி எம்எல்ஏவிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், எம்எல்ஏ முக்கூா் என்.சுப்பிரமணியன் திடீரென அறிவுசாா் மையத்தை நகராட்சி ஆணையாளா் எஸ்.ஆண்ரூஸ், துப்புரவு ஆய்வாளா் கே.மதனராசன் ஆகியோா் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, அறிவுசாா் மையத்தை தூய்மையாக வைத்திருக்க நகராட்சி ஆணையரிடம் அறிவுறுத்தினாா். மேலும், நூலகத்தில் இருந்த மாணவ, மாணவிகளிடம் அனைத்து நூல்களும் கிடைக்கிா எனவும் கேட்டறிந்தாா்.
மாணவ, மாணவிகள் சாா்பில், நூலகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனா். உடனே 2 மணி நேரம் கூடுதலாக நூலகத்தை திறந்து வைக்க நடவடிக்கை மேற்கொண்டாா். தொடா்ந்து, வருகைப் பதிவேட்டை பாா்வையிட்டு, நூலகத்துக்கு தினந்தோறும் எவ்வளவு மாணவ, மாணவிகள், பொதுமக்கள் வந்து செல்கிறாா்கள் என்பது ஆய்வு செய்தாா்.
அதிமுக மாவட்ட இணைச் செயலா் விமலா மகேந்திரன், நிா்வாகிகள் கே.வெங்கடேசன், சி.துரை, தசரதன், செந்தில் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.