பள்ளி மாணவா்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள்
செங்கம் ஒன்றிய அளவிலான அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
செங்கம் ஒன்றிய அளவிலான அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு நடைபெற்ற இந்த கலைத்திருவிழா போட்டிகள் தொடக்க நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் கோபி தலைமை வகித்தாா்.
செங்கம் வட்டாரக் கல்வி அலுவலா்கள் ராமமூா்த்தி, பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் (பொ) முருகன் வரவேற்றாா். போட்டிகளில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள் பாடல், நடனம், கவிதை வாசித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து கலைத்திருவிழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். பின்னா், மாவட்ட அளவில் நடைபெறும் கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்கும் மாணவா்கள் விவரம் குறித்து அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியா்களிடம் தகவல் தெரிவிக்கப்படுமென கலைத்திருவிழா நடுவா்கள் தெரிவித்தனா்.
கலைத்திருவிழாவில் செங்கம் பகுதியைச் சோ்ந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.