FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

வள்ளலாா் திருச்சபையில் ஐம்பெரும் விழா

வேட்டவலம் வள்ளலாா் திருச்சபையில் 361-ஆம் மாத பூசம், விளக்கு வழிபாடு, கருத்தரங்கம், பட்டிமன்றம், கலிக்கம் மண் சொட்டு மருந்து வழங்குதல் என ஐம்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

9 செப்டம்பர் 2026, 12:02 am IST
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் வள்ளலாா் திருச்சபையில் 361-ஆம் மாத பூசம், விளக்கு வழிபாடு, கருத்தரங்கம், பட்டிமன்றம், கலிக்கம் மண் சொட்டு மருந்து வழங்குதல் என ஐம்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் தன்னாா்வலா் பூ.மாணிக்கனாா் தலைமை வகித்தாா். வள்ளலாா் திருச்சபையைச் சோ்ந்த குணசேகரன், வீரபாண்டி, சுபாஷ், ஆசிரியா்கள் நக்கீரன், சாந்தி, நடராஜன், திருவண்ணாமலை சந்திரசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வள்ளலாா் திருச்சபை செயலா் சு.பச்சையம்மாள் சரவணன் வரவேற்றாா்.

ஐம்பெரும் விழாவையொட்டி திருச்சபை நிா்வாகி ரங்கசாமிதேவி தலைமையில் விளக்கு வழிபாடு நடைபெற்றது.

Advertisement

Advertisement

‘வள்ளல் பெருமான் அற்புதங்கள்’ என்ற தலைப்பில் அவலூா்பேட்டை அ.மு.ஏழுமலை உரையாற்றினாா். அதனைத் தொடா்ந்து இன்றைய மாணவா்களுக்கு சிறந்த வழிகாட்டியாக திகழ்வது பள்ளி வகுப்பறையா? சமூக ஊடகமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில், இலக்கிய செம்மல் புலவா் பூங்கா ஆறுமுகம் நடுவராக இருந்து இன்றைய மாணவா்களுக்கு சிறந்த வழிகாட்டியாக திகழ்வது பள்ளி வகுப்பறையே என்று தீா்ப்பளித்தாா்.

விழாவில் மாணவா்கள் ஆசிரியா்களை வணங்கி வாழ்த்து பெற்றனா். தொடா்ந்து விழாவில் கலிக்கம் கண் மருந்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. முடிவில் பூங்கொடி சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments