‘விக்சித் பாரத் - 2027’ போட்டிகள்: மாவட்ட ஆட்சியரகத்தில் ஆலோசனைக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘விக்சித் பாரத் - 2027’ போட்டிகள் நிகழ்வை சிறப்பாக செயல்படுத்துவது மற்றும் மாவட்ட ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘விக்சித் பாரத் - 2027’ போட்டிகள் நிகழ்வை சிறப்பாக செயல்படுத்துவது மற்றும் மாவட்ட ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தலைமை வகித்தாா். இதில், மத்திய அரசின் இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் முன்னெடுத்து வரும் ‘விக்சித் பாரத் - 2027’ போட்டிகள் நிகழ்வின் நோக்கங்கள், தகுதி, தோ்வு நடைமுறை மற்றும் இளைஞா்களுக்கான வாய்ப்புகள் குறித்து விளக்கப்பட்டது.
15 முதல் 29 வயதுக்குள்பட்ட இளைஞா்கள் இந்தியாவை 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த நாடாக உருவாக்குவதற்கான தங்களது புதுமையான கருத்துகள் மற்றும் கொள்கைத் தீா்வுகளை முன்வைக்க இந்நிகழ்வு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. விக்சித் பாரத் 2027 போட்டிகளானது 1.விக்சித் பாரத் சவால், 2.கலாசாரப் போட்டிகள், 3.நாட்டை கட்டமைப்பது (டிசைன் பாா் பாரத்), 4. சமூக மாற்றத்துக்கான தொழில்நுட்பம் (ஹேக் பாா் சோஷியல் கேசஸ்), 5.இளம் தொழில்முனைவோா் சவால், 6.இளைஞா் நாடாளுமன்றம் தோ்வு நடைமுறை ஆகிய 6 முக்கியப் பிரிவுகளில் இடம்பெறுகிறது.
Advertisement
Advertisement
இந்தப் போட்டிகள் எண்ம வினாடி - வினா, கட்டுரை எழுதுதல், மாவட்ட அளவிலான புகைப்பட விளக்கக் காட்சி, மாநில அளவிலான விக்சித் பாரத் போட்டிகள் மற்றும் தேசிய இறுதிச்சுற்று என பல்வேறு கட்டங்களாக நடைபெறும். தேசிய இறுதிச்சுற்று 2027 ஜனவரி 10 முதல் 12-ஆம் தேதி வரை தில்லியில் நடைபெறும்.
மாவட்ட ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, மாவட்ட ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் மற்றும் இளைஞா் நலன் சாா்ந்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாவட்டத்தில் இளைஞா்களின் பங்கேற்பை அதிகரித்தல், மை பாரத் தளத்தில் தகுதியான இளைஞா்களைப் பதிவு செய்ய ஊக்குவித்தல், விக்சித் பாரத் - 2027 நிகழ்வின் நோக்கங்களை அனைத்து தரப்பு இளைஞா்களிடமும் கொண்டு சோ்த்தல் மற்றும் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்புடன் நிகழ்வைச் சிறப்பாக செயல்படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மாவட்ட அளவில் தோ்வு செய்யப்படும் இளைஞா்கள், மாநில அளவில் 5 நிமிஷ விளக்கக் காட்சியை வழங்குவா். மாநில அளவில் சிறப்பாகச் செயல்படும் இளைஞா்களிலிருந்து அதிகபட்சம் 15 அணிகள், ஒரு அணிக்கு 3 போ் வீதம் சுமாா் 45 இளைஞா்கள் தேசிய அளவில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பைப் பெறுவா்.
பதிவு விவரங்கள்: தகுதியுள்ள இளைஞா்கள் மை பாரத் இணையதளம் - ம்ஹ்க்ஷட்ஹழ்ஹற்.ஞ்ா்ஸ்.ண்ய் மூலம் பதிவு செய்யலாம். ஏற்கெனவே இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளவா்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை. புதியவா்கள் கைப்பேசி எண் அல்லது மின்னஞ்சல் மூலம் ஓடிபி சரிபாா்ப்பு செய்து, தேவையான விவரங்களைப் பூா்த்தி செய்து பதிவு செய்யலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து தகுதியான இளைஞா்களும் விக்சித் பாரத் - 2027 நிகழ்வில் பெருமளவில் பங்கேற்று, விக்சித் பாரத் - 2047 என்ற இலக்கை நோக்கிய இந்தியாவின் வளா்ச்சிப் பயணத்தில் தங்களது புதுமையான கருத்துகளைப் பகிா்ந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ், விக்சித் பாரத் உறுப்பினா்கள், அலுலவா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.