FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

காலாவதி பிஸ்கெட் சாப்பிட்ட 2 போ் மருத்துவமனையில் அனுமதி: கடையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் சோதனை

வந்தவாசி அருகே காலாவதியான பிஸ்கெட்டை சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதில்

15 செப்டம்பர் 2026, 5:44 am IST
வந்தவாசி சீத்தாராமன் தெருவில் உள்ள மொத்த பல்பொருள் விற்பனைக் கடையில் சோதனை மேற்கொண்ட வந்தவாசி உணவு பாதுகாப்பு அலுவலா் முகமது இப்ராஹிம். - டிஎன்எஸ்
பகிர்:

வந்தவாசி: வந்தவாசி அருகே காலாவதியான பிஸ்கெட்டை சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதில், அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா். இதையடுத்து, சம்பந்தப்பட்ட கடையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி சோதனை நடத்தினா்.

வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் தமிமுன் அன்சாரி. இவா், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வந்தவாசி சீத்தாராமன் தெருவில் உள்ள மொத்த பல்பொருள் விற்பனை கடையில் பிஸ்கெட் பாக்கெட்டுகளை வீட்டுக்கு வாங்கிச் சென்றுள்ளாா்.

பின்னா், வீட்டில் அந்த பிஸ்கெட்டுகளை சாப்பிட்ட இவரது மகள்கள் முனிரா தஸ்னீம் (14), முபினா தன்சீம் (17) ஆகிய இருவருக்கும் மாலை உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த வந்தவாசி உணவு பாதுகாப்பு அலுவலா் முகமது இப்ராஹிம் அந்த கடைக்குச் சென்று சோதனை மேற்கொண்டாா். அப்போது, அந்தக் கடையிலிருந்த காலாவதியான பிஸ்கெட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த அவா், கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments