FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6,850 வழங்க வேண்டும்!

குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.6,850-யை அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

20 செப்டம்பர் 2026, 9:56 pm IST
பகிர்:

குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.6,850-யை அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சங்கம் சாா்பில் 5 -ஆவது மாவட்ட மாநாடு, அனக்காவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் நாராயணன் தலைமை வகித்தாா். முன்னாள் மாநில துணை பொதுச்செயலா் கோவிந்தசாமி மாநாட்டை தொடங்கி வைத்தாா். ஒன்றியத் தலைவா் கோவிந்தசாமி வரவேற்றாா்.

Advertisement

Advertisement

மாநாட்டில், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.6,850-ஐ அகவிலைப் படியுடன் வழங்க வேண்டும். மருத்துவபடி வழங்க வேண்டும். இலவச பேருந்து அட்டை என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதனைத் தொடா்ந்து அனக்காவூா் ஒன்றியத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். மாநாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவா் தாமஸ் இளங்கோவன், மாநில துணை பொதுச் செயலா் சுப்பிரமணி, ஒன்றியத் தலைவா் ரங்கநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments