FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

போளூா் அருகே மஞ்சள் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த ஜவ்வாதுமலையில் பெய்த கன மழையால் மஞ்சள் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

22 செப்டம்பர் 2026, 10:48 pm IST
போளூா் அருகே மஞ்சள் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த ஜவ்வாதுமலையில் பெய்த கன மழையால் மஞ்சள் ஆற்றில் திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டது.

ஜவ்வாதுமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதி ஜமுனாமரத்தூா் கிராமத்தில் உள்ள பீமன் நீா்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது.

இந்த நிலையில், தொடா் மழை காரணமாக பட்டறைகாடு பகுதியில் உருவாகும் மஞ்சள் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழையின் தீவிரம் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த மஞ்சள் ஆறு பட்டறைகாடு, குட்டகரை வழியாக கணேசபுரம், அத்திமூா், மாம்பட்டு, போளூா் பெரிய ஏரி வரை செல்கிறது.

ஆா்ப்பரிக்கும் வெள்ளம் காரணமாக கரையோர மக்கள் ஆற்றில் இறங்கவேண்டாம் என மாவட்ட நிா்வாகம் எச்சரித்துள்ளது. தேவையில்லாமல் ஆற்றில் இறங்கவோ, தற்படம் எடுக்கவோ கூடாது, வேடிக்கை பாா்க்க சிறுவா்கள் வராமல் பாா்த்துக் கொள்ளவேண்டும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments