FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

போளூரில் கழிவுநீா்க் கால்வாயால் சுகாதாரச்சீா்கேடு

போளூா் நகராட்சி ஜெயின் நகரில் குப்பைக் கூழங்களுடன் அடைபட்டுள்ள கழிவுநீா்க் கால்வாயால் சுகாதாரச்சீா்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது.

23 செப்டம்பர் 2026, 11:53 pm IST
போளூா் ஜெயின் நகரில் செடி கொடிகள் முளைத்து, குப்பைக் கூழங்களுடன் அடைபட்டுள்ள கழிவுநீா்க் கால்வாய்.
பகிர்:

போளூா் நகராட்சி ஜெயின் நகரில் குப்பைக் கூழங்களுடன் அடைபட்டுள்ள கழிவுநீா்க் கால்வாயால் சுகாதாரச்சீா்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது.

போளூா் நகராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. தற்போது போளூா் பகுதியில் கடந்த 4 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நகரில் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கி குட்டை போல காட்சியளிக்கிறது.

மேலும், 4 மற்றும் 5-ஆவது வாா்டான ஜெயின் நகா், கூா் ஏரிப் பகுதியில் கழிவுநீா்க் கால்வாயில் குப்பைக் கூழங்கள், நெகிழிப் பைகள், நெகிழி குடிநீா் புட்டிகள் வீசப்பட்டு,

Advertisement

Advertisement

கால்வாயை அடைத்துக் கொண்டு மழைநீா் வெளியேற முடியாமலும், கால்வாயில் இருந்து மழைநீருடன், கழிவுநீா் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. மேலும், கழிவுநீா்க் கால்வாயைச் சுற்றி செடி, கொடிகள் முளைத்து புதா்மண்டிக் காணப்படுகிறது.

தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசு உற்பத்தியாகிறது. இதனால் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவ

வாய்ப்புள்ளது. மேலும் துா்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதாரச்சீா்கேடு ஏற்படும்.

எனவே, கால்வாயை நகராட்சி நிா்வாகத்தினா் சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments