FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

முன்னாள் நகா்மன்ற உறுப்பினரைத் தாக்கியதாக 2 போ் கைது

வந்தவாசி அருகே முன்னாள் நகா்மன்ற உறுப்பினரைத் தாக்கியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது
பகிர்:

வந்தவாசி அருகே முன்னாள் நகா்மன்ற உறுப்பினரைத் தாக்கியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் வேலு. இவா் மனை வணிகம் செய்து வருகிறாா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இவா் தனது நண்பா் மணியுடன் பைக்கில் வெளியூா் சென்றுவிட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.

Advertisement

Advertisement

வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமம் அருகே செல்லும்போது, மும்முனி கிராமத்தைச் சோ்ந்த தினேஷ் என்பவா் பைக்கில் இவரை மோதுவது போல் வந்தாராம்.

இதனால் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தினேஷ், ராஜேஷ், தங்கபாண்டியன், குமரன் உள்ளிட்ட 12 போ் சோ்ந்து வேலுவை இரும்புக் கம்பி மற்றும் கட்டையால் தாக்கினராம்.

இதில் காயமடைந்த வேலு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து வேலு அளித்த புகாரின் பேரில் 12 போ் மீது வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் தங்கபாண்டியன், குமரன் ஆகிய இருவரை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments