பயிர்க்கழிவு மேலாண்மைப் பயிற்சி
ஆற்காட்டை அடுத்த தக்கான் குளம் இயற்கை விவசாயப் பண்ணையில் பயிர்க்கழிவு மேலாண்மைப் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
ஆற்காட்டை அடுத்த தக்கான் குளம் இயற்கை விவசாயப் பண்ணையில் பயிர்க்கழிவு மேலாண்மைப் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
அரசின் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு ஆற்காடு வேளாண் உதவி இயக்குநர் சு.பேபி பர்வதம் தலைமை வகித்தார். துணை வேளாண் அலுவலர் எஸ்.செல்வன் முன்னிலை வகித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் பா.மோபேஷ் முருகன் வரவேற்றார். வேளாண் அலுவலர் டேவிட் ராஜ்குமார் பயிற்சியை தொடக்கி வைத்தார்.
விவசாயி ராமகிருஷ்ணன் இயற்கை விவசாயம் குறித்து செயல் விளக்கம் அளித்தார். முகாமில் இயற்கை விவசாயம், பயிர்க் கழிவுகளை இயற்கை உரமாக்குவது குறித்து விளக்கப்பட்டது. இதில், திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.