ஜனவரியில் விஐடியில் தகவல் தொழில்நுட்ப பயிற்சி
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் உதவித் தொகையுடன் 6 மாதகால தகவல் தொழில்நுட்ப பயிற்சி முகாம் வரும்
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் உதவித் தொகையுடன் 6 மாதகால தகவல் தொழில்நுட்ப பயிற்சி முகாம் வரும் ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. இந்தப் பயிற்சியில் சேர பி.எஸ்ஸி. கணினி அறிவியல், பி.சி.ஏ. பட்டதாரிகள் பதிவு செய்யலாம் என்று விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆஸ்பயர் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும், விஐடியின் அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளையும் இணைந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள பி.எஸ்ஸி. கணினிஅறிவியல், பி.சி.ஏ. பட்டதாரி களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் உதவித் தொகையுடன் பயிற்சி அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்பு பெற்றுத்தரவும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வரும் ஜனவரி மாதம் தொடங்க உள்ள 6 மாதகால பயிற்சி முகாமில் சேர விரும்பும் பி.எஸ்ஸி கணினி அறிவியல், பி.சி.ஏ. பட்டதாரிகள் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பென்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பயிற்சி முகாமில் சேர்வதற்கு தகுதியுடையவர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல் நவம்பர் 23-ஆம் தேதி காலை 10 மணிக்கு விஐடி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான விவரங்கள் பெறவும், பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்யவும் 0416-2202196, 8124454737 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், பயிற்சியில் சேர்வதற்கு polestar@aspiresys.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது சுயவிவர குறிப்புகளை சமர்ப்பிக்க வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே நேர்காணலில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.