காஞ்சிபுரம் 4ஜி செல்லிடப்பேசி நிறுவன பணிக்கு ஆள்சேர்ப்பு முகாம்: வேலூரில் நாளை நடக்கிறது
காஞ்சிபுரத்திலுள்ள 4ஜி செல்லிடப்பேசி நிறுவனப் பணிகளுக்கான ஆள்சேர்ப்பு முகாம் வேலூரில் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
காஞ்சிபுரத்திலுள்ள 4ஜி செல்லிடப்பேசி நிறுவனப் பணிகளுக்கான ஆள்சேர்ப்பு முகாம் வேலூரில் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலூர் மாவட்டத்தில் வேலைதேடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிய தகுதியான நபர்களைத் தேர்வு செய்து அனுப்பி வருகிறது.
இதன் ஒருபகுதியாக காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள 4ஜி செல்லிடப்பேசி தயாரிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு ஆள்சேர்க்கும் வேலைவாய்ப்பு முகாம் வேலூர் அண்ணாசாலையில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 15) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாம் மூலம் ஆயிரம் பணியாளர்கள் வரை தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதாந்திர ஊதியமாக ரூ. 10,900 வழங்கப்படும். மேலும் பி.எஃப், இஎஸ்ஐ, உணவு, தங்கும் வசதி வழங்கப்படும். வேலூரிலிருந்து தினசரி சென்றுவர வாகன வசதியும் உண்டு.
தகுதியுடையோர் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று தங்களுக்கான வேலைவாய்ப்பைப் பெற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 94430 11949, 89400 94169 ஆகிய செல்லிடப்பேசி எண்களில்
தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.