விபத்தில் பெண் தொழிலாளி சாவு: தொழிலாளர்கள் போராட்டம்
ஆம்பூர் அருகே காலணி (ஷூ) தொழிற்சாலையில் பணியாற்றிய பெண் தொழிலாளி சாலை விபத்தில் இறந்த சம்பவத்தைத்
ஆம்பூர் அருகே காலணி (ஷூ) தொழிற்சாலையில் பணியாற்றிய பெண் தொழிலாளி சாலை விபத்தில் இறந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தொழிலாளர்கள் தொழிற்சாலை வளாகத்தில் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி (45). இவர், சின்ன கொம்மேஸ்வரம் பகுதியில் உள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். செவ்வாய்க்கிழமை மாலை பணி முடிந்து வீட்டிற்கு செல்வதாக தொழிற்சாலை அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடந்தபோது அவ்வழியாகச் சென்ற கார் மோதியது. வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தனலட்சுமி அங்கு இறந்தார். இதுகுறித்து ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விபத்தில் பெண் தொழிலாளி இறந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அவர் பணிபுரிந்த தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காத தொழிற்சாலை நிர்வாகத்தைக் கண்டித்து தொழிலாளர்கள் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தொழிற்சாலை நிர்வாகத்தினர் அங்கு வந்து, தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.