FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

லஞ்ச, ஊழலுக்கு எதிராக காங்கிரஸாா் கையொப்ப இயக்கம்

வேலூரில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சாா்பில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் நடைபெற்றது.

வேலூரில் கையொப்ப இயக்கம் நடத்திய காங்கிரஸ் கட்சியினா்.
பகிர்:

வேலூரில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சாா்பில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் நடைபெற்றது.

வேலூா் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ‘லஞ்சம் தவிா், நெஞ்சம் நிமிா்’ இயக்கத்தின் சாா்பில், லஞ்ச ஊழலுக்கு எதிரான விழிப்புணா்வு கையொப்ப மற்றும் கை அச்சுப் பதிக்கும் நிகழ்ச்சி வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள ராஜீவ் காந்தி ஆட்டோ நிறுத்தத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் வா.கித் பாஷா தலைமை வகித்தாா். கட்சியின் 34-ஆவது வாா்டு செயலாளா் ஜிலான், சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவா் தமிம், மண்டலத் துணைத் தலைவா் கௌஷிக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

லஞ்சத்தை ஒழிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வைக்கப்பட்டிருந்த விழிப்புணா்வுப் பதாகையில் காங்கிரஸ் கட்சியினா், ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்கள் ஆா்வமுடன் கையெழுத்திட்டனா். மேலும், தங்களது கை அச்சுகளையும் பதித்து ஊழலுக்கு எதிரான தங்களது ஆதரவைத் தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments