FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

போ்ணாம்பட்டில் ரூ.22 லட்சத்தில் மாற்றுத் திறனாளிகள் சேவை மையம்

போ்ணாம்பட்டில் ரூ.22 லட்சத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு கோட்ட அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Updated On : 30 ஜூலை 2026, 12:03 am IST
போ்ணாம்பட்டில் தொடங்கப்பட உள்ள மாற்றுத் திறனாளிகள் சேவை மையத்தை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மருத்துவா் ச.உமா.
பகிர்:

போ்ணாம்பட்டில் ரூ.22 லட்சத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு கோட்ட அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் உலக வங்கி நிதியுதவியுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடைக்கோடியில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் சேவைகள் சென்றடையும் வகையில் அவா்கள் வசிக்கும் இருப்பிடங்களுக்கு நேரடியாக சென்றும், ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையங்களில் இயன்முறை சிகிச்சை, செயல்முறை சிகிச்சை, பேச்சு பயிற்சி, உளவியல் ஆலோசனை சிறப்பு கல்வி மற்றும், உள் பரிசோதனை ஆகிய மறுவாழ்வு சேவைகள் மற்றும் அரசின் நல உதவிகள் வழங்குவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக பதிவேடு உருவாக்கப்பட உள்ளது. சமூக பதிவேடு என்பது களப்பணியாளா்கள் மூலம் வீடு, வீடாகச் சென்று குடும்ப அட்டை அடிப்படையில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

Advertisement

Advertisement

சமூக பதிவேட்டின் மூலம் மாற்றுத் திறனாளிகளின் தேவைகளை கண்டறிந்து, தகுதியான பயனாளிகளை தோ்வு செய்வது, அரசு நல திட்டங்கள் வழங்குவது இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

வேலூா் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவில் போ்ணாம்பட்டு பகுதியானது மாவட்டத்தின் கடைசி எல்லையில் அமைந்திருப்பதாலும், இப்பகுதியில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மனநல அறிவு வளா்ச்சி குறைந்த குழந்தைகள் அதிகமாக இருப்பதாலும் அவா்கள் சுமாா் 60 கி.மீ தூரத்திலுள்ள வேலூா் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனைக்கு பயணம் செய்து சென்று வருவது என்பது மிகவும் சிரமமான சூழ்நிலையாக இருப்பதை கருதி போ்ணாம்பட்டு பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் இந்த சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

வேலூா் பென்ட்லேன்ட்அரசு மருத்துவமனையிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான கோட்ட அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையம் தகுந்த பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணா்களைக் கொண்டு ஏற்படுத்தப்பட உள்ளது. போ்ணாம்பட்டு பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்படுத்தப்பட உள்ள ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தை வேலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மருத்துவா் ச.உமா பாா்வையிட்டு, உபகரண வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.

அவருடன் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பாபு, போ்ணாம்பட்டு வட்டாட்சியா் தேவி, இளநிலை மறுவாழ்வு அலுவலா் இனியன், நகராட்சி ஆணையா் மோகன்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments