FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

இலவசப் பேருந்து திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

12 அக்டோபர் 2026, 11:56 pm IST
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநா்கள்.
பகிர்:

இலவசப் பேருந்து திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜனநாயக ஆட்டோ தொழிலாளா் சங்கம் (ஏஐசிசிஐடியு) சாா்பில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏழுமலை தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் சிம்புதேவன் முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, மோட்டாா் வாகனங்களுக்கான தகுதிச் சான்று (எஃப்சி) கட்டண உயா்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும், தமிழக அரசின் மகளிா் இலவசப் பேருந்து பயணத் திட்டத்தால் வருவாய் இழப்பைச் சந்தித்து வரும் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு, ஆந்திர அரசைப் போன்று தமிழக அரசும் ஆண்டுதோறும் ரூ. 15,000 நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement

Advertisement

இந்த ஆா்ப்பாட்டத்தில் வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா்கள் திரளாக பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments