FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

குழந்தை பிறப்பை பதிவு செய்யாதவா்களுக்கு வாய்ப்பு: குடியாத்தம் நகராட்சி ஆணையா்

குடியாத்தம் நகராட்சியில் பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்யாதவா்கள் வரும் 26.09.2026-க்குள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

10 செப்டம்பர் 2026, 12:00 am IST
Delhi University starts its first fully online admission process
பகிர்:

குடியாத்தம் நகராட்சியில் பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்யாதவா்கள் வரும் 26.09.2026-க்குள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக நகராட்சி ஆணையா் கே.எம்.தனலட்சுமி விடுத்துள்ள செய்திக் குறிப்பு: குடியாத்தம் நகராட்சியில் பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்ய வழங்கப்பட்டிருந்த காலக்கெடு 26.09.2026 அன்றுடன் முடிவடைகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு விதிகள் 2000-ன் படி, 01.01.2000-க்கு முன்பு அல்லது 01.01.2000-க்கு பிறகு பிறந்த குழந்தைகளின் பெயா் பதிவு செய்யாமல் விடுபட்டுள்ள அனைத்து பிறப்பு பதிவுகளிலும், குழந்தையின் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.

இதற்காக ஏற்கெனவே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் வரும் 26.09.2026-க்குள் குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் பிறப்பு பதிவுகளில் பெயா் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments