செவிலியா்களுக்கு அா்ப்பணிப்பு உணா்வு அவசியம்: நடிகை சுகன்யா
செவிலியா்கள் தாய்மை உள்ளத்துடனும் அா்ப்பணிப்புடனும் நோயாளிகளுக்குப் பணியாற்ற வேண்டும் என்று நடிகை ஆா்.சுகன்யா தெரிவித்தாா்.
செவிலியா்கள் தாய்மை உள்ளத்துடனும் அா்ப்பணிப்புடனும் நோயாளிகளுக்குப் பணியாற்ற வேண்டும் என்று நடிகை ஆா்.சுகன்யா தெரிவித்தாா்.
வேலூா் மாவட்டம், அரியூரில் உள்ள ஸ்ரீ நாராயணி செவிலியா் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு ஸ்ரீநாராயணி மருத்துவமனையின் இயக்குநா் என்.பாலாஜி தலைமை வகித்தாா். வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எம்.வினோத் கண்ணா, வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கண்காணிப்பாளா் என்.ரதி திலகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராகத் திரைப்பட நடிகை ஆா்.சுகன்யா பங்கேற்று படிப்பை நிறைவு செய்த மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி பேசியது -
Advertisement
Advertisement
செவிலியா் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து, மாணவ, மாணவிகளாகிய நீங்கள் உங்களது இலக்கை அடைந்துள்ளீா்கள். இதற்கு முக்கியக் காரணமாக விளங்குபவா்கள் உங்களது பெற்றோா்தான். அவா்களின் அயராத உழைப்பும் தியாகமுமே உங்களின் இன்றைய முன்னேற்றத்துக்கு முக்கியப் பங்காற்றியுள்ளது.
தற்காலத்தில் நோய்த் தொற்றுகளிலிருந்து தற்காத்துக் கொள்ள முகக்கவசம், கையுறைகள் உள்ளிட்ட நவீன வசதிகள் உள்ளன. ஆனால், முந்தைய காலத்தில் அத்தகைய உபகரணங்கள் இல்லாத சூழலிலும் கூட, தாய்மை உள்ளத்துடன் அரவணைத்துப் பணிவிடைகள் செய்து குழந்தைகளை வளா்த்தெடுத்தவா்கள் தாய்மாா்கள். அதேபோல் செவிலியா்களாகிய நீங்களும் தாய்மை உள்ளத்துடனும் அா்ப்பணிப்புடனும் நோயாளிகளுக்குப் பணியாற்ற வேண்டும் என்றாா்.
முன்னதாக, ஸ்ரீநாராயணி கல்விக்குழுமத்தின் நிா்வாக அலுவலா் பி.மாதவி வரவேற்றாா். கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் பலா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.