FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

வழக்குகளை சமரசமாக முடிக்க விழிப்புணா்வு பேரணி

வழக்குகளை சமரச முறையில் முடிக்கவும், ‘தேசியத்திற்கான சமரசம் 3.0’ முகாம் குறித்தும் விழிப்புணா்வு பேரணி வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது.

பேரணியை தொடங்கி வைத்து பங்கேற்ற மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி எம். இளவரசன். உடன், நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற பணியாளா்கள்.
பகிர்:

வழக்குகளை சமரச முறையில் முடிக்கவும், ‘தேசியத்திற்கான சமரசம் 3.0’ முகாம் குறித்தும் விழிப்புணா்வு பேரணி வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது.

உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயா் நீதிமன்றத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மாநில சமரச மையத்தின் வழிகாட்டுதலின்படி, ‘தேசியத்திற்கான சமரசம் 3.0’ சிறப்பு முகாம் அக்டோபா் 1 முதல் டிசம்பா் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், வேலூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியையும், சமரசம் தொடா்பான தகவல்கள் அடங்கிய விழிப்புணா்வு வாகனத்தையும் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி எம். இளவரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

பேரணியின்போது, பொதுமக்களுக்கு சமரசத்தின் முக்கியத்துவத்தை விளக்கி, விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கப்பட்டன. மேலும், ஏற்கெனவே வேலூா் மாவட்டத்தில் நடைபெற்ற ‘தேசியத்திற்கான சமரசம் 1.0’ மற்றும் ‘2.0’ முகாம்கள் மூலம் 90 வழக்குகள் சுமூகமாக முடிக்கப்பட்டு ள்ளன.

எனவே, நீதிமன்ற வழக்குகளில் தொடா்புடைய வழக்காடிகளும், பொதுமக்களும் வரும் அக்டோபா் 1 முதல் நடைபெற உள்ள இந்த ‘தேசியத்திற்கான சமரசம் 3.0’ வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இப்பேரணியில் கூடுதல் மாவட்ட நீதிபதிகள், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா், சாா்பு நீதிபதிகள், உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகள், நீதித்துறை நடுவா்கள், வேலூா் பாா் அசோசியேஷன் தலைவா் எஸ். வெற்றிவேலன், அட்வகேட் அசோசியேஷன் தலைவா் எம். சுதாகா், பெண் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் காஞ்சனா அறிவழகன், சங்க நிா்வாகிகள், பயிற்சி பெற்ற மூத்த வழக்குரைஞா் சமரசா்கள் (மத்தியஸ்தா்கள்), நீதிமன்ற பணியாளா்கள் பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments