FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

அதிமுகவுக்கு ஆதரவு கோரி அமைச்சர் வாக்குசேகரிப்பு

திருப்பூர், அக்.8: உள்ளாட்சித் தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி மேயர், வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு அதிமுகவுக்கு ஆதரவு கோரி தொழில் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தீவிர வாக்குசேகரிப் பில் ஈடுபட்டார்.  ÷த

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:19 am IST
பகிர்:

திருப்பூர், அக்.8: உள்ளாட்சித் தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி மேயர், வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு அதிமுகவுக்கு ஆதரவு கோரி தொழில் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தீவிர வாக்குசேகரிப் பில் ஈடுபட்டார்.

 ÷தேர்தலையொட்டி திருப்பூர் மாநகராட்சி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அவர் சனிக்கிழமை திருப்பூரில் வாக்குசேகரிப்பு பணியில் ஈடுபட்டார். முதலில், நெசவாளர் காலனியில் தேவாங்க செட்டியார் பேரவை நிர்வாகிகளை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு கோரினார்.

 ÷தொடர்ந்து, அவிநாசி சாலை குமார் நகரிலுள்ள சிஎஸ்ஐ தேவாலயத்துக்குச் சென்ற அவர் தேவாலய பாதிரியார்களிடம் அதிமுகவுக்கு வாய்ப்பளிக்க வலியுறுத்தினார். பிறகு, தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையிலும் பங்கேற்றார்.

Advertisement

Advertisement

 ÷அதைத் தொடர்ந்து, அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினரை சந்தித்து அதிமுக மேயர் வேட்பாளர் ஏ.விசாலாட்சி மற்றும் 60 வார்டு அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க பிரசாரத்தில் ஈடுபடவும் கேட்டுக் கொண்டார். பின்னர், பெரிய பள்ளிவாசலுக்கு சென்ற அமைச்சர் வேலுமணி அங்கு இஸ்லாமியர்களிடத்திலும் அதிமுகவுக்கு ஆதரவு திரட்டினார்.

 ÷இந்த சந்திப்புகளின்போது ஊரக தொழில்துறை அமைச்சர் சி.சண்முகவேலு, சி.சிவசாமி எம்பி, திருப்பூர் வடக்கு எம்எல்ஏ எம்.எஸ்.எம்.ஆனந்தன், அதிமுக மேயர் வேட்பாளர் ஏ.விசாலாட்சி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 ÷தொடர்ந்து, மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் வேலுமணி, சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவை திருப்பூர் வெற்றி பெறச் செய்துள்ளது. இந்த திருப்பூரில் மேயர் பதவிக்கும் மற்றும் 60 வார்டுகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெறச் செய்ய அதிமுகவினர் தீவிர பணியாற்றிட வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments