காங். மேயர் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
கோவை, அக். 8: கோவை மேயர் பதவிக்கான காங்கிரஸ் வேட்பாளர் ஏ.ஆர்.சின்னையன் பல்வேறு வார்டுகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தார். ÷வார்டு உறுப்பினர் பதவிக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் வளர்மதி ராமசாமி (வார்டு 5
கோவை, அக். 8: கோவை மேயர் பதவிக்கான காங்கிரஸ் வேட்பாளர் ஏ.ஆர்.சின்னையன் பல்வேறு வார்டுகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தார்.
÷வார்டு உறுப்பினர் பதவிக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் வளர்மதி ராமசாமி (வார்டு 52), கிருபா நந்தினி (வார்டு 53), கே.செல்வராஜ் (வார்டு 55), சி.ஆர்.சீனிவாசன் (வார்டு 69), குல்பி தங்கராஜ் (வார்டு 68), ஜெபீனா மேரி (வார்டு 73), ராஜேஸ்வரி (வார்டு 75) ஆகியோருக்கும் அவர் வாக்கு சேகரித்தார்.
÷காந்திபுரம், ஆவாரம்பாளையம், பழையூர், செங்காடு, அம்மன்குளம், ஒலம்பஸ், சுப்பையன் வீதி, பெரியார் காலனி, போலீஸ் கந்தசாமி வீதி, ராமநாதபுரம், 80 அடி சாலை, பெருமாள் கோவில் வீதி, கொங்கு நகர், நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதிகளில் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Advertisement
Advertisement
÷மேயர் வெங்கடாசலம், தமிழக இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மயூரா எஸ்.ஜெயகுமார், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் கே.பி.எஸ்.மணி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் இருகூர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.