FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

தேர்தல் பணியை புறக்கணிக்கும் வங்கி அலுவலர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

திருப்பூர், அக்.8: தேர்தல் பணியில் ஈடுபட வங்கியாளர்கள் போதிய ஆர்வம்காட்டாத சூழல் நிலவுகிறது. தொடர்ந்து, தேர்தல் பணிகளை புறக்கணிக்கும் பட்சத்தில் தேர்தல் விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:19 am IST
பகிர்:

திருப்பூர், அக்.8: தேர்தல் பணியில் ஈடுபட வங்கியாளர்கள் போதிய ஆர்வம்காட்டாத சூழல் நிலவுகிறது. தொடர்ந்து, தேர்தல் பணிகளை புறக்கணிக்கும் பட்சத்தில் தேர்தல் விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் எம்.மதிவாணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 ÷உள்ளாட்சித் தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் 2,434 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

 இவற்றில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக 524 வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பதற்றம் மிகுந்த வாக்குச்சாவடிகளிலும், வாக்குப்பதிவின் போதும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட மைக்ரோ அப்சர்வர்களாக வங்கியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

 ÷அதற்காக மாவட்டத்திலுள்ள வங்கிகளுக்கு மின் அஞ்சல் (இ-மெயில்) மூலமாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எனினும், தேர்தல் பணியில் ஈடுபடுவது தொடர்பாக வங்கியாளர்களிடம் இருந்து போதுமான விண்ணப்பங்கள் வரவில்லை. இந்நிலையில், 524 வாக்குச்சாவடிகளில் பணியில் ஈடுபடும் மைக்ரோ அப்சர்வர்களை ஒருங்கிணைக்க நியமிக்கப்பட்டுள்ள 33 அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சிக் கூட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்தது.

 ÷மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.மதிவாணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 33 ஒருங்கிணைப்பு அலுவலர்களில் 10 பேர் மட்டுமே பங்கேற்றனர். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து பேசிய ஆட்சியர் மதிவாணன், தேர்தல் பணியை புறக்கணிக்கக் கூடாது. அவ்வாறு புறக்கணிக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே, 10ம் தேதிக்குள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வங்கியாளர்கள் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்தல் பிரிவில் ஒப்படைக்க வேண்டும் என்றார்.

 ÷மாவட்ட எஸ்பி வி.பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.கஜலட்சுமி, தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.ஜெயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத் தைத் தொடர்ந்து எல்ஆர்ஜி அரசு கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு சென்ற ஆட்சியர், அங்கு வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான ஏற்பாடுகள் செய்வது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments