FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாவட்டத்தில் 20 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கம்: ரசீதுடன் கூடிய வாக்குப் பதிவு இயந்திரம் அறிமுகமாகிறது

கோவை மாவட்டத்தில் 20 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் ரசீதுடன் கூடிய வாக்குப் பதிவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

கோவை மாவட்டத்தில் 20 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் ரசீதுடன் கூடிய வாக்குப் பதிவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தின் இறுதி வாக்காளர்கள் பட்டியலை கடந்த ஜனவரி 20-இல் ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார்.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள பத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 13 லட்சத்து 97 ஆயிரத்து 938 ஆண் வாக்காளர்கள், 14 லட்சத்து 8 ஆயிரத்து 509 பெண் வாக்காளர்கள், 243 திருநங்கைகள் என மொத்தம் 28 லட்சத்து 6 ஆயிரத்து 690 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

Advertisement

Advertisement

இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டியிருந்தனர். இதையடுத்து, வீடுகள்தோறும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இதன் மூலமாக, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த இறந்தவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு பெற்றவர்கள் என 20 ஆயிரத்து 4 வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி பல்வேறு மாநிலங்களில் இருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, அவற்றை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரசீதுடன் கூடிய வாக்குப் பதிவு இயந்திரம்: கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் 285 வாக்குச் சாவடி மையங்களிலும் ரசீதுடன் கூடிய வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல் முறையாக பயன்படுத்தப்படவுள்ளன. வாக்காளர்கள் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தார் என்பது குறித்த ரசீது வழங்கப்படும். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் ரசீதுடன் கூடிய வாக்குப் பதிவு இயந்திரம்  அறிமுகப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.       

2 ஆயிரம் சக்கர நாற்காலிகள்: கோவை மாவட்டத்தில் மொத்தம் 2,892 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், மாற்றுத் திறனாளிகள் எளிதாகச் சென்று வாக்களிக்கும் வகையில் 2 ஆயிரம் வாக்குச் சாவடி மையங்களில் சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்படவுள்ளன.

 மேலும், பதற்றமான வாக்குச் சாவடி மையங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments