FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கொச்சி விமான நிலையத்தில் வெள்ளம்: சர்வதேச விமானங்கள் கோவையில் தரையிறக்கம்

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய இரண்டு சர்வதேச விமானங்கள் கோவைக்கு புதன்கிழமை திருப்பி அனுப்பப்பட்டது.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய இரண்டு சர்வதேச விமானங்கள் கோவைக்கு புதன்கிழமை திருப்பி அனுப்பப்பட்டது.
கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கொச்சி விமான நிலையத்திலும் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய மஸ்கட் மற்றும் அபுதாரியில் இருந்து வரும் இரண்டு சர்வதேச விமானங்கள், கோவை விமான நிலையத்துக்கு புதன்கிழமை திருப்பிவிடப்பட்டன. 
மேலும், சனிக்கிழமை வரையில் கொச்சி விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் அடுத்த இரண்டு நாள்களுக்கும் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கக் கூடிய சர்வதேச விமானங்கள் கோவை விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட உள்ளன. 
 ஏற்கெனவே கோவை விமான நிலையத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 44 விமான சேவைகள் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படுகின்றன. தற்போது, கொச்சி விமான நிலையத்தில் இருந்து அதிக அளவில் விமானங்கள் கோவைக்கு திருப்பி விடப்படும் பட்சத்தில் அதைக் கையாளக் கூடிய இடவசதி, தொழில்நுட்ப வசதி உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments